சினிமா

நண்பர் அஜித் போல் கோர்ட் சூட் அணிந்து வந்தேன் ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில்- விஜய்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதற்கு பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என யாருக்குமே அழைப்பு விடுக்கப்படவில்லை. ‘மாஸ்டர்’ படக்குழுவினர் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டார்கள்.

எப்போதும் கேஷூவலாக வரும் விஜய் இந்த விழாவில் கோர்ட் ஷுட் அணிந்து வந்திருந்தார். இதைப் அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். 

ALSO READ  மாதவன் இயக்கிய 'ராக்கெட்ரி' படத்தின் ட்ரைலர் வெளியீடு !

’மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசி முடிந்தவுடன், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பாவனா மற்றும் மிர்ச்சி விஜய் இருவரும் விஜய்யிடம் சில கேள்விகளை எழுப்பினார்கள். 

அதில் கோர்ட் சூட் குறித்த கேள்விக்கு விஜய், ‘ஒவ்வொரு விழாவுக்கும் ரொம்ப சுமாராக உடையணிந்து சொல்கிறீர்கள் என காஸ்ட்டியூமர் பல்லவி இந்தக் கோர்ட் கொடுத்தாங்க. சரி, நம்மளும் நண்பர் அஜித் மாதிரி கோர்ட் போட்டுப் போவோம் என்று வந்தேன். நன்றாக இருக்கிறதா? என்றார் விஜய்.

ALSO READ  'மாஸ்டர் படம் 1000 நபர்களின் கடின உழைப்பு' அனிருத் ட்வீட் !

விஜய்யின் இந்த பதிலைச் சற்று எதிர்பாராத அரங்கிலிருந்தவர்கள், கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த ஆரவாரம் அடங்க சில மணித்துளிகள் பிடித்தது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாஸ்டர் பட தயாரிப்பாளர் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு!

News Editor

கொரோனாவால் பிரபல இயக்குநர் உயிரிழப்பு !

News Editor

‘மாயவன் நிலத்தில் இறங்குகிறோம்’ இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !

News Editor