இந்தியா

கொரோனா வைரஸ் அச்சத்தால் ரயில்களில் A/C பெட்டிகளில் பயணிகளுக்கு போர்வை வழங்குவது நிறுத்தம்- ரயில்வே உத்தரவு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் பரவுவதையடுத்து ரயிலில் ஏ/சி பெட்டிகளில் பயணிகளுக்குக் கம்பளிப் போர்வை, திரைச்சீலை போன்றவை வழங்குவது நிறுத்தப்படுகிறது என்று மத்திய மற்றும் மேற்கு ரயில்வே அறிவித்துள்ளன.

இதுகுறித்து மேற்கு ரயில்வேயின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்:-

ஏற்கனவே இருக்கும் விதிமுறையின்படி ஏ/சி பெட்டிகளில் இருக்கும் திரைச்சீலை, கம்பளிப் போர்வை போன்றவை ஒவ்வொரு பயணத்திலும் சலவை செய்வது இல்லை.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இனி ரயிலில் ஏ/சி பெட்டிகளில் பயணிகளுக்குக் கம்பளிப் போர்வை மற்றும் திரைத்துணி வழங்குவது உடனடியாக நிறுத்தப்படுகிறது.

எனவே ஏ/சி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் சொந்தமாகப் போர்வைகளை எடுத்துவருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேவைப்பட்டால் கூடுதலாகப் படுக்கை விரிப்புகள் தரப்படும் எனத் தெரிவித்தார். ஆனால் அதேசமயம் படுக்கை விரிப்பு, சாதாரண போர்வை, துண்டு, தலையணை உறை போன்றவை நாள்தோறும் துவைக்கப்படும் என்பதால் அது வழக்கம்போல் வழங்கப்படும்.

ALSO READ  புல்லட் ரயில் திட்டம் போல் ஹைப்பர் லூப் திட்டமும் கைவிடப்படுகிறதா- அஜித் பவார்

ரயில்வேயின் கதவு கைபிடிகளை தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பிடிப்பதால் அதனை ஆழ்ந்து சுத்தம் செய்யுமாறு மத்திய ரயில்வே பணியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாகக் கதவு, கைபிடிகள், ஜன்னல் பிடிகள், கண்ணாடிக் கதவுகள், ஜன்னல் கம்பிகள், தண்ணீர் பாட்டில் வைக்கும் கிளிப், மேல் படுக்கை இருக்கும் கம்பிகள் ஆகியவற்றைத் தீவிரமாகச் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கொரோனா வராது; வந்தாலும் உடனே போய்விடும்- செல்லூர் ராஜூ 

மேலும், கழிவறைகளில் சோப்பு, நாப்கின் ரோல், சானிடைசர் போன்றவை வைக்கவும் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர ரயில்வே கழிவறைகள் நீராவி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து

News Editor

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; ரவுடி உட்பட 4 பேர் பலி..!

Admin

“ஏ.ராஜா ஆகிய நான்” தமிழ் மொழியில் பதவியேற்றுக்கொண்ட கேரள எம்.எல்.ஏ ..!

News Editor