சினிமா

“ரோட்டர்டாம்” சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ்ப்படம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘கூழாங்கல்’.திரைப்படத்தை    விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடத்தும் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ்  மீறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

முதலில் கூழாங்கல் திரைப்படத்தினை வேறு ஒரு நிறுவனம் தயாரித்து வந்தது. அதனையடுத்து படக்குழுவினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்குக் கைமாற்றப்பட்டது. முன்னரே படத்தின் அணைத்து பணிகளும் முடிந்த நிலையில் கூழாங்கல் படத்தினை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வருகிறது. சமீபத்தில் நெதர்லாந்தில் நடைபெற்ற  ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில்  திரையிட, கூழாங்கல் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில், ‘கூழாங்கல்’ திரைப்படம் இவ்விழாவில் விருதுவென்றுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் உறுதிசெய்துள்ளார். அதனையடுத்து தற்போது இப்படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ALSO READ  தடுப்பூசி போட்டுக்கொண்டதில் சர்ச்சை; விளக்கமளித்த நயன்தாரா ! 

மேலும் கூழாங்கல் திரைப்படத்தினை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இவர்தான் தனுஷின் அடுத்தப்பட இயக்குநரா!

Admin

‘நெற்றிக்கண்’ ரீமேக்கில் நடிக்க ஆசை: நடிகர் தனுஷ்

Admin

அப்டேட் வெளியிட்ட மாஸ்டர் படக்குழு ..!

News Editor