சினிமா

பாகுபலி வெப் தொடரில் நடிக்க மறுத்த நடிகை சமந்தா :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராஜமவுலி இயக்கத்தில் 2 பாகங்களாக வெளியான படம் ‘பாகுபலி’. இதில் பிரபாஸ், நாசர், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து இருந்தனர். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது.

தற்போது பாகுபலி கதை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெப் தொடராக தயாராகிறது. பாகுபலியில் ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் வந்த ரம்யாகிருஷ்ணனின் இளம் வயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த தொடரை எடுக்கின்றனர்.

பாகுபலி பட காட்சிகளுக்கு முந்தைய சம்பவங்கள் இந்த தொடரில் இடம்பெற உள்ளன. இதில் இளம் வயது சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். சமீபத்தில் வெளியான ‘பேமிலி மேன் 2’ தொடரில் சமந்தாவின் போராளி கதாபாத்திரத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இதனை கருத்தில் கொண்டு அவரை அணுகி உள்ளனர். ஆனால் நடிகை சமந்தா, இந்த வெப் தொடரில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.


Share
ALSO READ  விவாகரத்து உண்மையே - நாக சைதன்யா - சமந்தா அறிவிப்பு …!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நல்லது செய்யும் எண்ணத்தோடு அரசியலுக்கு வருபவர்களை வரவேற்கிறேன் : பிரபல நடிகர் விளக்கம்

Admin

காதல் திருமணம் குறித்து கயல் ஆனந்தி விளக்கம்..!

News Editor

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் பலி….

naveen santhakumar