சினிமா

“சூர்யா 40” படத்தின் வில்லன் குறித்த அப்டேட் வெளியீடு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரின்  நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சூரரைப் போற்று’. ஓடிடி தளத்தில் வெளியாகியது. அதனையடுத்து இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ‘சூர்யா 40’ எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளார்.  இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா 40 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் பலர் நடிக்கவுள்ளனர். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன்  தொடங்கப்பட்டுள்ளது. 

ALSO READ  தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு !

இந்த நிலையில், ‘சூர்யா 40’ படத்தின் வில்லன் நடிகர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக நடிகர் வினய் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.  இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாநாடு முக்கிய அப்டேட்? யுவன்ஷஙகர் ராஜா டுவிட்…! 

naveen santhakumar

இயக்குநர் சமுத்திரக்கனிக்கு இவ்வளவு பெரிய மகனா?… என்ன செஞ்சியிருக்கார் பாருங்க!

naveen santhakumar

யோகி பாபுவிற்கு க்ளாப் அடித்த பிரபல இயக்குனர் !

News Editor