அரசியல்

அதிமுக தேமுதிக இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை; முடிவுக்கு வருமா  இழுபறி…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்தவகையில் அதிமுக கட்சி தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

அந்த வகையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக பாஜகவிற்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  அதில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் தொகுதியும் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர் இழுப்பறிக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் இரு கட்சிகளுக்கிடையே உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அதிமுக மற்றும் தேமுதிகவுடனான தொகுதி பங்கீட்டில் தற்போது வரை இழுபறி நீடித்து வருகிறது. தேமுதிகவுடன் 4 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இதுவரை இரண்டு கட்சிகளும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில் தேமுதிகவுக்கு 13 தொகுதிகள் வரை கொடுக்க அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இன்று இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப் பதிவு....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கலைஞரின் கனவு நிறைவேறியது; திண்டுக்கல் ஐ. லியோனி பேட்டி !

News Editor

கமல்ஹாசனின் சர்வாதிகார போக்கு; ம.நீ.ம. பொது செயலாளர் கட்சியில் இருந்து விலகல் !

News Editor

திமுகவை மிரட்டும் சிவி சண்முகம்… வெங்கடாசலம் தற்கொலையில் திடீர் திருப்பம்!

naveen santhakumar