சினிமா

சசிகுமார் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிரபல இயக்குனர்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சசிகுமார் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானார். அதன் பிறகு குட்டிப்புலி, நாடோடிகள், பிரம்மன், கிடாரி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் நடிகர் சசிகுமார்.

அதனையடுத்து இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் நாடோடிகள் 2. இந்தப்படத்தினை இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கிருந்தார். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. 

அதனை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில்  பொன்ராம் இயக்கியுள்ள ‘எம்.ஜி.ஆர் மகன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. அடுத்ததாக இவர்  ராஜவம்சம், பரமகுரு, கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படத்திற்கு “பகைவனுக்கு அருள்வாய்”  என பெயரிடப்பட்டு இயக்குனர் அனீஸ் இயக்கவுள்ளார். 

ALSO READ  தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்- ரசிகர்கள் கொண்டாட்டம்

இவர் ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியான ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தை இயக்கிய இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  “பகைவனுக்கு அருள்வாய்”  படத்தில் கதாநாயகியாக  வாணி போஜன், பிந்து மாதவி நடிக்கிறார்கள். அவரகள் தொடர்ந்து  படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் நாசர், சதிஷ் நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இதனை  4 மங்கீஸ் ஸ்டூடியோ  நிறுவனம் தயாரிக்கிறது. 

இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடை பெற்றுவரும் நிலையில், கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டது படக்குழு. இதனை நடிகர் சூர்யா,ராம்கோபால் வர்மா மற்றும் பிருத்விராஜ் இணைத்து வெளியிட்டனர். தற்போது இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுவருகிறது.

ALSO READ  காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வைரமுத்துவை எதிர்க்கும் மலையாள சினிமா; விருது வழங்குவதை மறுபரிசீலனை செய்கிறது  ஓ.என்.வி. அகாடமி !

News Editor

தமிழ் ராக்கர்ஸ் தளம் நிரந்தரமாக மூடப்படுகிறது:

naveen santhakumar

வாடிவாசலில் சீறிப்பாயும் நடிகர் சூர்யா

Admin