சினிமா

பிரபல தெலுங்கு  நடிகருக்கு கொரோனா…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் வருண் தேஜ் கொனிடெலாவுக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்டது.   உலகம் முழுவதும் பரவிய இந்த வைரசின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அதனையடுத்து. இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரஸ் மரபியல் மாற்றம் அடைந்து புதிய வகை வைரஸாக பரவி உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 

இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகரான வருண் தேஜ் கொனிடெலாவிற்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “சிறிய அறிகுறிகளுடன் எனக்கு  கொரோனா   தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் எனது வீட்டில் என்னைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கிறேன். விரைவில் மீண்டுவருவேன். உங்களது அன்பிற்கு நன்றி” என்று  குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  கர்ணன் படத்திற்கு நடுக்கடலில் பேனர் வைத்த ரசிகர்கள் !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜய் சேதுபதியை அவ்வளவு நேசிக்கிறேன்; பாராட்டி தள்ளிய மெகா ஸ்டார் 

News Editor

எனக்கு காதல் கடிதமே வந்ததில்லை – கீர்த்தி சுரேஷ்….

naveen santhakumar

நடிகர் அருண் விஜய் மாமனார் காலமானார் !

News Editor