சினிமா

“மாஸ்டர்” படக்குழு கொடுத்த அப்டேட்… உற்சாகத்தில் ரசிகர்கள்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாஸ்டர்” படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு. 

லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து “மாஸ்டர்” படத்தினை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். . படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் அவரை  முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, மகேந்திரன், கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

அதனைதொடரந்து படத்தின் முழு பணிகளும் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். பின்னர் கொரோனா நெருக்கடி   காரணங்களால் தீபாவளிக்கு வெளியிடததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  இதனை தொடர்ந்து, மாஸ்டர் படத்தின்   ட்ரைலர் ஆங்கில புத்தாண்டுக்கு வெளியாகும் என்றும்,  படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியது. அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது.

ALSO READ  தேசிய ஊரடங்கு - பிரபலங்கள் என்னென்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா?

அதனைதொடரந்து  படக்குழு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது, அதில்  மாஸ்டர் படத்தின் அப்டேட் நாளை (29/12/2020) மதியம் 12.30 மணிக்கு வெளியாகும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது படக்குழு மாஸ்டர் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் அடுத்த மாதம் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. தற்போது இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியன் 2 படத்தில் இப்படித்தான் நடிக்கிறேன் : உண்மையை சொன்ன காஜல்

Admin

கதாநாயகியாக அறிமுகமாகும் சாய் பல்லவியின் தங்கை !

News Editor

இளம் கன்னட நடிகை தற்கொலை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

News Editor