உலகம் மருத்துவம்

கொரோனா வைரஸ்: நமது வாசனை உணரும் திறன் மற்றும் சுவையை உணரும் திறனை பாதிக்கபடுமா??? பகீர் ரிப்போர்ட்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்பொழுது மற்றொரு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வைரஸால் வாசனை நுகரும் திறன் இழப்பு (Anosmia/ Hyposmia) மற்றும் சுவை உணரும் திறனை இழப்பது (Ageusia) தெரியவந்துள்ளது

இதுகுறித்து பிரிட்டனின் காது-மூக்கு-தொண்டை (ENT) கான British Association of Otorhinolaryngology
தலைவர் ப்ரொஃபஸர் நிர்மல் குமார் கூறுகையில்:-

என்னிடம் வந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளம் நோயாளிக்கு கொரோனாவிற்கு தற்போது கூறப்படும் இருமல், தும்மல் மற்றும் காய்ச்சல் போன்ற எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. ஆனால் அவருக்கு சுவை உணரும் திறன் மற்றும் வாசனை உணரும் திறன் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேபோல் பிரிட்டன் அமைச்சர் நாடின் டோரில் (Nadine Dorris) தனக்கும் சுவை உணரும் திறன் மற்றும் வாசனை நுகரும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பிரிட்டனில் மட்டும் அல்லாமல் உலக முழுவதும் வாசனையை நுகரும் திறன் பாதிக்கப்படுவதாக பலர் கூறி வருகின்றார்கள். 

ALSO READ  அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு..!

ஈரானில் இவ்வாறு கூறுபவர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதேபோன்று அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நுகரும் திறன் மற்றும் சுவை உணரும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஃபிரான்ஸ், ஸ்வீடன், இத்தாலி ஆகிய நாடுகளிலும் பலருக்கு வாசனை நுகரும் திறன் ( Anosmia/ Hyposmia) பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஜெர்மனி மற்றும் தென் கொரியாவில் மூன்றில் ஒரு பங்கினருக்கு வாசனை நுகரும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ALSO READ  இவ்வளவு பெரிய பீட்ஸாவை பார்த்து இருக்கீங்களா ???

இதுகுறித்து International SOS துணைத் தலைவர் மற்றும் மருத்துவ இயக்குனர் ராபர்ட் L குயிக்லேவிடம் (Robert L. Quigley) கேட்டபோது:-

இதேபோல கடந்த 2003 ஆம் ஆண்டும் சார்ஸ் (SARS) நோய் தொற்றால் (கொரோனாவை ஒத்த வைரஸ்) பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவை உணரும் திறன் மற்றும் வாசனை உணரும் திறன் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. அது மட்டுமல்ல சாதாரண காய்சலால் கூட நமது வாசனை திறனும் சுவை உணரும் திறனும் பாதிக்கப்படும்.

இந்த கொரோனா தொற்றால் நமது நாசியின் வாசனை உணரும் நரம்புகள் தற்காலிகமாக பாதிக்கப்படுகிறது. இதனால் வாசனை உணரும் திறன் தற்காலிகமாக இழக்கிறோம். எனவே யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதன்முறையாக நிலத்தடியில் இருந்து ஏவுகணை பரிசோதனை நடத்திய இஸ்லாமிய புரட்சி படை… 

naveen santhakumar

மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு – டேவிட் ஜுலியஸ், ஆர்டம் பட்டாபோர்ஷின் இருவரும் சேர்ந்து பெறுகின்றனர்

News Editor

வழக்கத்தை விட இன்று பெரிஜீ (Perigee) பெரிதாகத் தெரிந்தது.

naveen santhakumar