இந்தியா

இந்தியாவில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். இந்நிலையில் உலகம் முழுவதும் 2-வது கட்ட கொரோனா அலை, அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கோர முகத்தை காட்டி வருகிறது. இதனை தடுக்க பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  

ALSO READ  துணைராணுவப் படையினரின் கேன்டீன்களில் சுதேசி பொருள்கள் மட்டுமே விற்கப்படும்- அமித் ஷா அறிவிப்பு.. 

இதுவரை 10 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆரம்பத்தில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கொரோனா மிக வேகமாகப் பரவியது. தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், தற்போது இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,713 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 95 பேர் இந்த நோய் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய் தொற்றில் இருந்து 14,488 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

News Editor

Букмекерские Конторы Без Паспорта И Нелегальные Бк Без Цупис Для Ставок На Спор

Shobika

அந்தமானில் பயங்கர நிலநடுக்கம் :

Shobika