இந்தியா

விவசாயிகளுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் கருத்து..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசு கொண்டுவந்துள்ள  வேளாண்  சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில்  இரண்டு மாதங்களுக்கு மேல் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அணைத்து  பேச்ச வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன. 

அதனையடுத்து  குடியரசு தினத்தன்று நடந்த ட்ராக்டர் பேரணியில் விவசாயிகளும் போலீசார்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்தார்.மேலும் பலர் காயமடைந்தனர்.  அத்தனையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சர்வதேச பிரபலங்கள் கருது தெரிவித்துள்ளனர். அனால் இவர்களின் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ALSO READ  "ரஜினி, கமல், விஜய்" போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது : சீமான் பரபரப்பு பேட்டி  

அந்த பதிவில்,  ‘இந்தியாவின் இறையாண்மையைச் சமரசம் செய்ய முடியாது. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும்; ஒரே நாடாக ஒற்றுமையுடன் இருக்கட்டும். வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம்; ஆனால் பங்கேற்பாளர்களாக அல்ல’ எனக் குறிப்பிட்டுள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு..!

News Editor

2-சக்கர வாகன நம்பர் பிளேட்டில் பாலினம் குறித்த பதிவு : புது டெல்லி மகளிர் ஆணையம் நோட்டிஸ்

News Editor

Vulcan Vegas Bestes Сasino Mit Bonus Codes Für Bestehende Kunden, Attraktiven Willkommensbonus, Promo Codes Für Freispiel

Shobika