இந்தியா

சம்பள பாக்கி கேட்ட பெண் ஊழியர் மீது நாயை ஏவி கடிக்க விட்ட கொடூர உரிமையாளர்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

சம்பள பாக்கியை கேட்ட பெண் ஊழியர் மீது ஸ்பா உரிமையாளர் நாயை ஏவி கடிக்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த சப்னா என்ற பெண் டெல்லியின் கிர்கி எக்ஸ்டென்சன் பகுதியில் ஆயுர்வேத ஸ்பா சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். ஒன்றரை மாதம் அங்கு வேலை பார்த்த அவர், ஊரடங்கு காரணமாக மார்ச் 22ம் தேதியிலிருந்து வேலைக்கு செல்லவில்லை. ஆனால் அவரது சம்பள பாக்கியை ஸ்பா உரிமையாளரான ரஜ்னி கொடுக்கவில்லை. இந்நிலையில் ஊரடங்கால் சப்னாவுக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் ரஜ்னியிடம் தனது சம்பள பாக்கியை கேட்டுள்ளார். அவரும் சப்னாவை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

ALSO READ  பீரங்கிகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் துருவாஸ்ட்ரா ஏவுகணை சோதனை வெற்றி…

அதன்படி, இதைத்தொடர்ந்து, அவரும் கிர்கி பகுதியில் உள்ள உரிமையாளர் வீட்டிற்கு அந்த பெண் சென்றுள்ளார். அப்போது மீண்டும் வேலையில் சேர்ந்தால்தான் ஊதியத்தை தருவேன் என ரஜ்னி கூறியுள்ளார். ஆனால் கொரோனா அச்சத்தின் காரணமாக, அதற்கு சப்னா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முடிவில், ரஜ்னி அவர் வளர்த்து வந்த நாயை ஏவி அப்னாவை கடிக்க வைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரது முகம் மற்றும் கழுத்தில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளன. அது மட்டுமில்லாமல் 2 பற்களும் உடைந்துள்ளன.

மதன் மோகன் மாளவியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சப்னா, ஜுன் 11-ல் டெல்லி போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக 289 மற்றும் 308 ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். 

ALSO READ  சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டார் ராகுல் காந்தி!

இந்த நிலையில், ரஜ்னி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காரை விற்று காற்று(ஆக்சிஜன்) கொடுத்த நெகிழ்ச்சி மனிதர் !

News Editor

சாலைகளில் பாலை கொட்டி விவசாயிகள் போராட்டம்- மக்கள் அதிர்ச்சி… 

naveen santhakumar

கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா ஐபிஎஸ் நியமனம்… 

naveen santhakumar