இந்தியா

விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினரும் போராட்டம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அவர்கள் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றன.

இவ்வாறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,  விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் கட்சியும் அறிவித்துள்ளது.

ALSO READ  22 சதவீத பணிகள் மட்டுமே செயல்பட்டது சபாநாயகர் ஓம்பிர்லா குற்றச்சாட்டு

இதுதொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி, நாட்டின் விவசாயிகளுடன் நிற்க கடமைப்பட்டு உள்ளது. எனவே வரும் 15-ம் தேதியை விவசாயிகள் அதிகார தினமாக காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது. அன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைநகரங்களில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். அத்துடன் இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் தர்ணாவும் நடைபெறும்” என்று கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாகிஸ்தான், பங்களாதேசத்தில் இருந்துவந்த இஸ்லாமியர்களை வெளியேற்ற வேண்டும் : சிவசேனா

Admin

лучшие Букмекерские Конторы Рейтинг Букмекеров Топ Бк 2024 Онлайн Ставки На Спор

Shobika

Royal Enfield நிறுவனத்தின் Himalayan BS6 மாடல் அறிமுகம்

Admin