இந்தியா

பாபர் மசூதி இடிப்பு…..இன்று தீர்ப்பு….போலீஸ் பலத்த பாதுகாப்பு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக CBI போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் L.K.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட  49 பேர் மீது குற்றம் சாட்டி CBI போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்தனர்.

இதில் 17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள CBI கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது.

ALSO READ  ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

இந்த தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏதும்  ஏற்படலாம் என கருதி, அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. திரிபாதி இது தொடர்பான எச்சரிக்கை தகவலை அனுப்பி உள்ளார். சென்னையில் முக்கியமான இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுவார்கள் என்றும், போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மதுபிரியர்களுக்கு குஷி அறிவிப்பு – தள்ளுபடியில் மதுபானம் விற்பனை

naveen santhakumar

முடிவிற்கு வந்த 65 வருட சகாப்தம்- மூடப்பட்டது விட்கோ நிறுவனம்…! 

naveen santhakumar

அம்பானி வீட்டில் தற்கொலை செய்த இளைஞர் – காரணம் என்ன ?

Admin