இந்தியா

ஓ.பி.சி பட்டியலில் திருநங்கைகள் -மத்திய அரசு முடிவு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உலக அளவில் திருநங்கைகளுக்கு பல்வேறு ஆதரவுகளும், அங்கீகாரங்களும் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறுவதற்கா, ஓ.பி.சி பட்டியலில் தங்களை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக இருந்தது.

இட ஒதுக்கீடு பெற ஏதுவாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மூன்றாம் பாலினத்தவர்களான திருநம்பிகள், திருநங்கைகளை சேர்க்க மத்திய சமூக நீதித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, மத்திய சமூக நீதித்துறை ஓபிசி பட்டியலில் திருநங்கைகளை சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

ALSO READ  சமையல் எரிவாயு விலை திடீரென உயர்வு :

மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அதன்பிறகு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வக்கப்படும். இதன்மூலம் திருநங்கைகளும் ஓ.பி.சி பிரிவினர்க்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டின் மூலம் பயன்பெறமுடியும். சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விபத்தில் சிக்குவதற்கு முன் இரு முறை முயற்சி செய்த ஏர் இந்தியா விமானம்… 

naveen santhakumar

பெங்களூருவில் வன்முறை துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு; 60 போலீசார் காயம்… 

naveen santhakumar

வெட்கத்தில் துள்ளி ஓடிய மனைவி; இணையத்தை கலக்கும் Cute Couple….

naveen santhakumar