இந்தியா

இனி ரயில் நிலையங்களில் கூகுள் wifi இல்லை…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய ரயில் நிலையங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச wifi சேவையை நிறுத்த கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2015ம் ஆண்டு முதல் 400க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் இலவசமாக wifi சேவைகளை வழங்கி வந்தது. இதற்கு லாக்-இன் செய்ய நம் செல்போன் எண்ணை பதிவிட்டு OTP உதவியுடன் நாம் இந்த சேவையை இலவசமாக பெறலாம்.

இந்நிலையில் உலக அளவில் ரயில் நிலையங்களில் வழங்கப்பட்டு வந்த wifi சேவையை கூகுள் நிறுவனம் 2020ம் ஆண்டிற்குள் நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தற்போது அனைத்து ரயில் நிலையங்களுக்கும் RailTel நிறுவனம் wifi சேவை வழங்க முடிவு செய்துள்ளது.

ALSO READ  அப்டேட் வெளியிட்ட 'கர்ணன்' படக்குழு !

இந்தியாவிலுள்ள 5600 ரயில் நிலையங்களில் கூகுள் வழங்கிய 415 ரயில் நிலையங்களை தவிர்த்து மற்றவைகளுக்கு RailTel நிறுவனம் தான் wifi சேவையை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் தெரிவிக்கையில், இந்தியாவில் மலிவு விலையில் மொபைல் டேட்டாக்கள் கிடைப்பதால் சேவை நிறுத்தப்படுவதாக கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதிய சாதனை : நாடு முழுதும் ஒரே நாளில் 2.50 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது..!!

Admin

உலக அமைதி மாநாட்டில் மம்தா பானர்ஜி பங்கேற்க ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு

News Editor

மது பிரியர்களுக்கு ஷாக்…தடுப்பூசி போட்டவர்களுக்கே இனி சரக்கு….

Shobika