உலகம்

ஒரு பாட்டில் காற்று ருபாய் 2500 ருபாய் : பிரிட்டன் நிறுவனம் அதிரடி 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்று மனித சமுதாயம் தொழில் நுட்பத்தில் ஆளப்பெறும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆகையால் இயற்கையை கூட தன் வசப்படுத்துவதற்க்கான முயற்சிகள் பல நடந்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டில் வசிக்கும் பிரிட்டன் குடிமக்களுக்காக பிரிட்டனின் நான்கு பகுதிகளின் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகிறது தனியார் நிறுவனமான MY BAGGAGE.

இதன் மூலம் வெளிநாடு வாழ் பிரிட்டன் மக்கள் தங்களுக்கு தேவையுள்ள நேரங்களில் தாய்நாட்டின் காற்றை கொஞ்சம் சுவாசித்துக் கொள்ளலாம் என்கிறது அந்நிறுவனம். இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் இருந்து காற்றை பாட்டிலில்  அடைத்து ஆகாய மார்க்கமாக சப்ளை செய்கிறது MY BAGGAGE நிறுவனம். கண்ணாடி பாட்டிலில் காற்றை பிடித்து, மரத்தினாலான மூடியை கொண்டு  அதை அடைத்து விற்பனை செய்கிறது. 500 மில்லி லிட்டர் கொண்ட பாட்டிலில் உள்ள காற்றின் விலை 2.500 ரூபாய்.

இந்த நிறுவனத்திடம் சிறப்பு கோரிக்கை வைத்தால் அவர்கள் வாழ்ந்த சொந்த ஊரின் காற்றையும் பாட்டிலில் பிடித்து கொடுக்கிறது. இதனை வாங்கும் மக்கள் சில நொடிகள் அந்த பாட்டிலின் கார்க்கை திறந்து காற்றை சுவாசித்து விட்டு, அடைத்து கொள்ளலாம் எனவும் MY BAGGAGE நிறுவனம் தெரிவித்துள்ளது.   


Share
ALSO READ  தொடங்கியது "பொன்னியின் செல்வன்" படப்பிடிப்பு...!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மனிதம் தோல்வி அடைந்துள்ளதாக ஐ.நா பொதுச்செயலாளர் கவலை..!

News Editor

உகாண்டாவில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு..

Shanthi

மூச்சுவிட முடியாத நிலையில் தவித்து வரும் நடிகை ரிச்சா:

naveen santhakumar