இந்தியா

தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் இல்லை : உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் தற்போதைக்கு தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வார்டுகள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி முத்தியால்பேட்டை தொகுதி சுயேட்சை எம்எல்ஏ பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உள்ளாட்சித் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீறி செயல்பட முடியாது என்று கூறி, இதுதொடர்பாக புதுச்சேரி அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

ALSO READ  தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிப்பு !

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது புதுச்சேரி அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெரனல் ஆர்.சங்கரநாராயணன் ஆஜராகி,

ALSO READ  அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் கட்சியிலிருந்து விலகல்
புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகும்... இனிப்பு கொடுத்து  கொண்டாடத் தடை | Pudhucherry assembly election results 2021: Election result  may be delayed says Election ...

முறையாக வார்டுகளை மறுவரையறை செய்து, வார்டு ஒதுக்கீட்டை மறுஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரியில் தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் வாய்ப்பு இல்லை.

இதனால் அக்.21 முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டெல்லியில் போராட்டக் களத்தில் குவிந்த ஆணுறைகள்.. உண்மையா இல்ல வதந்தியா ?

Admin

புதுச்சேரி ஆளுநர் பதவியில் இருந்து கிரண்பேடி நீக்கம்..!

News Editor

Mostbet Azerbaycan rəsmi casino Giriş və qeydiyyat Mostbet A

Shobika