இந்தியா

குகையில் தங்கியிருந்த ஆறு வெளிநாட்டினர்… மீட்டு தனிமைப்படுத்திய போலீசார்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உத்தர்கண்ட்:-

ரிஷிகேஷில் கங்கை நதிக் கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நீல்காந்த் கோவில் (Neelkanth Temple) அருகே அமைந்துள்ள குகை ஒன்றில் தங்கியிருந்த 6 வெளிநாட்டினரை போலீசார் மீட்டுள்ளனர்.

பிரான்ஸ், அமெரிக்கா, உக்ரைன், துருக்கி மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் இந்த குழுவில் தங்கியிருந்தனர். இவர்களை மீட்ட போலீசார் தர்மசாலாவில் உள்ள ஆசிரமம் ஒன்றில் தனிமைப்படுத்தி  உள்ளனர்.

புகழ்பெற்ற நீல்காந்த் கோயில் அருகே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் Dabota பகுதியில் குகை ஒன்றில் வெளிநாட்டினர் சிலர் தங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் முயற்சியில் இந்த ஆறு பேரையும் கண்டுபிடித்து தற்போது தனிமை படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து லக்ஷ்மண் ஜூலா காவல்துறை ஆய்வாளர் (பொறுப்பு) R.S. கதாய்த் கூறுகையில்:-

ALSO READ  இந்தியாவில் மேலும் 7 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் !

இவர்கள் அனைவரும் கடந்த மாதம் முனி கி ரேடி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர். கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.  இவர்கள் கையில் பணம் இல்லாத காரணத்தால், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதும், இவர்கள் அருகில் உள்ள குகை ஒன்றில் தங்கியிருந்து இருக்கிறார்கள். சில வெளிநாட்டினர் இவ்வாறு குகையில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து நாங்கள் அங்கு சோதனை நடத்தினோம். பின்னர் அவர்களை மீட்டு தர்மசாலாவில் தற்பொழுது தனிமைப்படுத்தி உள்ளோம் என்றார்.

ALSO READ  தமிழகத்தில் மேலும் 1 வாரம் ஊரடங்கினை நீட்டிக்க பரிந்துரை….

Oleh Sandetski மற்றும் Oksana Kravchuk உக்ரைனை சேர்ந்த இவர்கள் கடந்த டிசம்பர் 7ம் தேதி இந்தியா வந்துள்ளனர். Marve Turhan துருக்கி Michael Raffaele Falcone அமெரிக்கா, Ladislas Lucas பிரான்ஸ் மற்றும் Vishnu Giri இவர் நேபாள் நாட்டை சேர்ந்தவர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உ.பி.-ல் 6 வயது சிறுவன் கடத்தல்… 12 மணி நேரத்தில் மீட்ட போலீசார்…

naveen santhakumar

1xbet 보너스 사용법 알아보기 메인 계정과 보너스 계정의 차이 코리아벳

Shobika

ஓ மெடிக்கல் ஷாப்பில் மதுவிற்பார்களா?? ரகுல் ப்ரீத் சிங் கேள்வி…

naveen santhakumar