இந்தியா தமிழகம்

நிபா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பால் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து சிறுவனுடன் தொடர்ப்பில் இருந்த 17 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் மற்றும் வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ  மத்திய சிறைகளில் காவல்துறை திடீர் சோதனை
As Nipah fears resurface, Kerala to strengthen preventive measures - The  Hindu

இந்நிலையில், கேரளாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் பாதிப்பு பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக ஒட்டி தமிழக எல்லைகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளாவை உலுக்கும் நிபா வைரஸ்.. அறிகுறிகள் என்ன? தடுக்கும் முறை எப்படி? | 86  persons suffering from Nipah virus in Kerala - Tamil Oneindia

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக எல்லை மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ALSO READ  புதுச்சேரியில் கொரோனா பலி எண்ணிக்கை 920 ஆக அதிகரிப்பு! 

மேலும், புதிய வைரஸ் கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழக எல்லையில் உள்ள அனைத்து மாவட்டங்களில் அனைத்து வகையான காய்ச்சல் பாதிப்புகளையும் கண்காணித்து வருகிறோம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா… 

naveen santhakumar

புயல் காரணமாக தேசிய தகுதித் தேர்வு ஒத்திவைப்பு:

naveen santhakumar

ஓபிஎஸ் மனைவி மறைவு…

naveen santhakumar