இந்தியா

ஒருவழியாக கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் கொரோனா  முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மருத்துவர்கள் உள்ளிட்டோரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.

ALSO READ  இந்தியாவில் ஒரே நாளில் 18 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று..!

அதனையடுத்து இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதற்கட்ட கோவாக்சின் கொரோனா தடுப்பூசியைப் பிரதமர் மோடி செலுத்திக்கொண்டார். இந்த தடுப்பூசியை புதுச்சேரியை சேர்ந்த நிவேதா என்ற செவிலியர் பிரதமர் மோடிக்கு செலுத்தினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கேரளா- கொரோனாவே ஓயவில்லை அதற்குள் ஜிகா வைரஸ்?

naveen santhakumar

கொரோனா வார்டில் நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு அடி-உதை :

Shobika

அயோத்தியில் நாளை தீபோற்சவம்!

Shanthi