இந்தியா

பத்மநாபசுவாமி கோவிலின் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது: உச்ச நீதிமன்றம்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:-

திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் பராமரிப்பில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலின் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமையுள்ளதாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ள ரகசியஅறைகளில் தங்கம், வைரம், வைடூரியம், வெள்ளி பொருட்கள் அடங்கிய பொக்கிஷங்கள் வெளி உலகுக்கு தெரிய வந்தது. இக்கோயிலை, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர். “திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் பராமரிப்பில் உள்ள சொத்துக்கள், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாததால், சொத்துக்களை அரசு நிர்வகிக்க வேண்டும். கோவிலின் ரகசிய அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும்’ என, சுந்தரராஜன் என்பவர், கேரள ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த கேரள ஹைகோர்ட், கோவிலை அரசு நிர்வகிக்க வேண்டும் என 2011-ல் தீர்ப்பளித்தது.

கோவிலின் ரகசிய அறையில் கண்டறியப்பட்ட தங்கம், வெள்ளி நகைகள் உள்ளிட்ட விலையுயர்ந்த செல்வங்களைக் கணக்கெடுப்பதற்காக வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் ஆகியோரை நியமித்தது. 2011 ஆம் ஆண்டு இந்த பொக்கிஷங்களின் மதிப்பு ஒன்றரை லட்சம் கோடிக்கும் அதிகம் என்று கூறப்பட்டது. மேலும் இந்த ரகசிய அறைகளில் பி என்ற ரகசிய அறை இதுவரையில் திறக்கப்படாமல் உள்ளது. 

தீர்ப்பை எதிர்த்து, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கேரள ஐகோர்ட் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதேநேரம், கோவிலில் உள்ள ரகசிய அறைகளைத் திறக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்தாண்டு ஏப்ரலில் மீண்டும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

ALSO READ  சர்வதேச விமான சேவைகளுக்கு மேலும் ஒரு மாத காலம் தடை நீட்டிப்பு:

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் U.U.லலித் மற்றும் இந்து மல்கோத்ரா அடங்கிய அமர்வு, பத்மநாபசுவாமி கோவிலின் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்தது. கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிட, திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் ஐந்து பேர் கொண்ட இடைக்கால குழு அமைக்கலாம். குழுவில் இடம்பெறுபவர்கள் அனைவரும் ஹிந்துக்களாக இருக்க வேண்டும். கருவூலத்தை திறப்பது தொடர்பாக குழுவே முடிவு செய்யும் இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ  கிரிக்கெட் வீரர் யாஷ்பால் ஷர்மா காலமானார்

சேர மன்னர்களால் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த பத்மநாபசாமி கோயில் 18ம் நூற்றாண்டில் திருவாங்கூர் மன்னர் குடும்பத்தால் மறு சீரமைக்கப்பட்டது. திருவாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ராஜா மார்த்தாண்ட வர்மா தனது ராஜ்ஜியம் தனது உடைவாளை உட்பட அனைத்து செல்வத்தையும் பத்மநாபசுவாமி கோயிலுக்கு காணிக்கையாக அளித்தார்.

பின்னர் முகில்கான் என்பவன் பத்மநாபசாமி கோயில் மீது படையெடுத்து வந்தான். அந்தப் படையெடுப்பு திருவாங்கூர் சமஸ்தானத்தால் வெற்றிகரமாக தடுக்கப்பட்டது. அதன் பின்னர் கோயிலில் ரகசிய அறை ஏற்படுத்தப்பட்டு பொக்கிஷங்கள் அனைத்தும் அதனுள் வைத்து பாதுகாக்கப்பட்டது. இதில் பல அறைகள் திறக்கப்பட்டன. ஆனால் பி என்ற ஒரு அறை மட்டும் திறக்கப்படவில்லை. அந்த அறை திறக்கப்பட்டால் உலகம் அழிந்துவிடும் என்று கோயிலின் ஐதிகம் கூறுவதாக கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

News Editor

வாரம் 3 முட்டை புதுச்சேரி ஆளுநர் உத்தரவு !

News Editor

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் டிஜிட்டல் முறையில் தாக்கல் !

News Editor