இந்தியா

நவம்பர் 23-ம் தேதி முதல் மராட்டியத்தில் பள்ளிகள் செயல்பட அனுமதி:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:

மராட்டியத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், பள்ளிகள் மூடியே உள்ளன. தற்போது ஆன்லைன் மூலம் மட்டுமே மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் பள்ளிகளை மீண்டும் திறப்பது, 10, 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பிறகு வருகிற மே மாதத்திற்கு முன் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வை நடத்த முடியாது என கூறினார். ஆனால் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

ALSO READ  மாம்பழத்தின் விலை ரூ.2.70 லட்சம்…! பாதுகாக்க 4 காவலர்கள் 6 நாய்கள்…!

இந்தநிலையில் அவர் நேற்று பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தீபாவளி விடுமுறை முடிந்து வருகிற 23-ந் தேதி முதல் மாநிலத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பையடுத்து பள்ளிகளை மீண்டும் திறப்பதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவுறுத்தினார். மேலும், “உலகில் மற்ற இடங்களில் உள்ள சூழலை பார்க்கும் போது, 2-வது கட்ட கொரோனா அலைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிகிறது. எனவே நிர்வாகம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தீபாவளிக்கு பிறகு நாம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

ALSO READ  நவம்பர் 5ம் தேதி முதல் பள்ளி வளாகங்களிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்க பொதுசுகாதாரத்துறை உத்தரவு

பள்ளிகளில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் மூடப்படக்கூடாது. உள்ளூர் நிர்வாகம் வகுப்புகள் நடத்த மாற்று இடங்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளிகளை சுத்தம் செய்வது, ஆசிரியர்களுக்கு கொரோனா சிகிச்சை செய்வது மற்றும் இதர முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். மாணவர்களோ அல்லது அவர்களது வீட்டில் உள்ளவர்களோ உடல்நலம் பாதிக்கப்பட்டால் அந்த மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப கூடாது” என்று  முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உத்திரபிரதேசத்தில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!

News Editor

6 வயது மாற்றுத்திறனாளி மாணவிக்கு சூடு.. பள்ளி மீது புகார்..

Shanthi

முதலவர் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு !

News Editor