இந்தியா

இனி நோ காலண்டர், டைரி மத்திய அரசு அறிவிப்பு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தை தவிர பிற அமைச்சகங்கள் தனித்தனியாக காலண்டர்கள், டைரிகள் அச்சிடுவதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

இது தொடர்பாக அமைச்சகங்களுக்கும் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அக்கடிதத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின் கீழ் உள்ள தகவல் தொடர்பு பணியகத்துடன் மற்ற அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள அமைப்புகளும் சுவர் காலண்டர்கள், மேஜை காலண்டர்கள் மற்றும் டைரிகளை போன்றவற்றை தனித்தனியாக அச்சிட்டு வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இரட்டை பணிகளும், கூடுதல் நிதி செலவும் ஏற்படுகிறது’ என்றும் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

இனி இப்பணிகள் அனைத்தும் தகவல் தொடர்பு துறையின் கீழ் உள்ள Bureau of Outreach and Communication ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ள ராஜீவ் கவுபா, இனி அந்த பணியகம் மட்டும் அரசு காலண்டர்கள், டைரிகளை தயாரித்து பிற அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு வழங்கும் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

ALSO READ  நாடு தழுவிய வேலை நிறுத்தம் தொடங்கியது

எனவே, இந்த உத்தரவுக்கு மற்ற அனைத்து அமைச்சகங்களும் கண்டிப்பாக இணங்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டு உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப தனது சேமிப்புத் பணத்தை வழங்கிய 12 வயது சிறுமி!

naveen santhakumar

மழை, வெள்ளம் – மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 நிவாரணம்: முதல்வர்

naveen santhakumar

இனி ரூ.2000 கிடையாது – ரிசர்வ் வங்கி அடுத்த அதிரடி

Admin