இந்தியா சினிமா

ஒரு மீமுக்கு போரா? சண்டைக்கு அழைத்த அண்டர்டேகர்; சமாளித்த அக்‌ஷய்குமார்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை பிரபல மல்யுத்த வீரர் அண்டர்டேகர் சமூக வலைதளம் மூலம் சண்டைக்கு அழைத்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அக்‌ஷய் குமார். கடந்த ஆண்டு போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்திருந்தார் அக்‌ஷய் குமார். 366 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகராக உலக அளவில் அறியப்படுகிறார்.

இந்நிலையில், அக்‌ஷய் குமார் நடித்து கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லாடியோன் கா கில்லாடி.

ALSO READ  'எப்பாவது ஹிட் குடுத்தா ஓகே...' தனுஷுக்கு மீம்ஸ் போட்ட விவேக் !

இந்த திரைப்படத்தில் அக்‌ஷய் குமார், பிரபல மல்யுத்த வீரரான அண்டர்டேகர் உடன் மோதி வெற்றிப்பெறுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ரசிகர்களிடம் இந்த காட்சி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Akshay Kumar celebrates 25 years of Khiladiyon Ka Khiladi and defeating the  Undertaker - Movies News

இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் விதமாக அக்‌ஷய்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மீம் ஒன்றை பகிருந்திருந்தார்.

அதில், அண்டர்டேகரை தோற்கடித்தவர்கள் என பிராக் லெஸ்னர், ட்ரிபிள் ஹெச், ரோமன் ரெய்ன்ஸ் ஆகியோர் படத்துடன் அக்‌ஷய் குமார் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.

https://www.instagram.com/p/CQDXFsMtHrH/?utm_source=ig_web_copy_link

இந்த மீம் வைரலான நிலையில், உண்மையான ரீமேட்சுக்கு எப்போது நீங்கள் தயார் என அக்‌ஷய் குமாருக்கு அவர் கேள்வி எழுப்பி ஆச்சரியப்படுத்தினார் அண்டர்டேகர்.

ALSO READ  சாய்னா நேவால் படத்தின் டிரைலர் வெளியீடு !

இதற்கு அக்‌ஷய் குமார், எனது காப்பீட்டை ஆய்வு செய்துவிட்டு கூறுகிறேன் சகோதரரே என நகைச்சுவையாக பதிலளித்தார்.

Image

இதனிடையே, ரஞ்சித் எம்.திவாரி இயக்கத்தில் அக்‌ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெல் பாட்டம்’ திரைப்படம் ஜூலை 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Akshay Kumar gives a glimpse of what's happening on the sets of Bell Bottom  | Filmfare.com

இந்த திரைப்படம் 1980-களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் : வங்கிகள் செயல்படாது

Admin

புதுச்சேரிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது; கிரண்பேடி 

News Editor

திருடர்கள் மூலம் போலீசுக்கு கொரோனா… 17 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்….

naveen santhakumar