இந்தியா

படகில் கட்டிவைத்து நாயை கொடூரமாக அடித்துக் கொன்ற சிறுவர்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே அடிமலை துறை பகுதியில் Bruno என்ற வளர்ப்பு நாய் ஒன்றை சிறுவர்கள் சிலர் நாட்டுப்படகில் கட்டித் தொங்கவிட்டு கட்டையால் கொடூரமாக அடித்து கொன்ற வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kerala: Dog brutally thrashed to death at Adimalathura beach | Kochi News -  Times of India

நாயைப் பிடித்து சென்று நாட்டுப் படகில் கட்டி தொங்கவிட்டு அடித்துக் கொன்ற அந்த மூன்று சிறுவர்கள் நாயைக் கொன்றது போல துணையும் கொன்று விடுவோம் என நாயின் உரிமையாளரான கிறிஸ்து ராஜாவையும் மிரட்டியுள்ளனர்

courtesy

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நாயின் உரிமையாளர் கிறிஸ்துராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

ALSO READ  தோஷத்தை நீக்க பெற்ற தாயே மகனை நரபலி கொடுத்த அதிர்ச்சி சம்பவம்:

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஆதிமலத்துராவைச் சேர்ந்த சுனில், சில்வெஸ்டர் மற்றும் அவர்களது நண்பனையும் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து விழிஞ்சம் ஆய்வாளர் ரமேஷ் கூறுகையில்,

நாயை கொடூரமாக அடித்துக் கொன்ற அந்த மூவரும் 18 வயதிற்கு கீழான சிறுவர்கள், அவர்கள் மீது விலங்கு வன்கொடுமை தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

ALSO READ  யானைகளுக்கு தனது சொத்துக்களை எழுதி வைத்த மனிதர்…

மேலும், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஜூன் 28ம் தேதி அந்த சிறுவர்களை Bruno துரத்தியதால் அவர்கள் மூவரும் அந்த நாயை ஈவு இரக்கமில்லாமல் கொடூரமாக அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது

இதனிடையே கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயங்கரன் முயற்சியால் கேரள உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து பதிவு செய்துள்ளது.

தங்களை துரத்தி என்பதற்காக சற்று ஈவு இரக்கம் இல்லாமல் உரிமையாளரை மிரட்டி நாய் ஒன்றை கட்டி தொங்கவிட்டு சிறுவர்கள் மூவர் சேர்ந்து அடித்தே கொன்ற சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

New Poster

Shobika

ஆந்திர மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு ஹோட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி… 

naveen santhakumar

பிரிட்டனில் இருந்து வந்த ஆந்திர பெண்ணுக்கு கொரோனா தொற்று..!

News Editor