அமெரிக்க செய்தியாளர்கள் புத்தகத்தில் அதிபர் டிரம்ப் குறித்துஅதிர வைக்கும் தகவல்கள்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து நியுயார்க் டைம்ஸ் இதழின் இரண்டு செய்தியாளர்கள் எழுதிய புத்தகத்தில் அதிர வைக்கும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

எல்லைகளில் ஊடுருவல்களை தடுக்க மின்சார வேலிகள் அமைக்கவும் பாம்புகள் அல்லது முதலைகள் நிறைந்த சினிமா பாணியிலான அகழிகளை தோண்டி வைக்கவும் டிரம்ப் யோசனை தெரிவித்ததாக அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடுருவல் செய்வோரை கால்களில் சுட வேண்டும் என்றும் டிரம்ப் கூறியதாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தகவல்கள் பொய்யானவை என்றும் அப்படி தாம் கூறவே இல்லை என்றும் டிரம்ப் மறுத்துள்ளார்.

மெக்சிகோ எல்லையில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்குள் ஊடுருவுவதைத் தடுக்க தடுப்புச் சுவர் அமைப்பதும் அமெரிக்காவின் இலக்காக உள்ளது. சுவரை கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக அமெரிக்க ராணுவ அமைப்பான பென்டகன் சுமார் மூன்றரை பில்லியன் டாலர் ராணுவ நிதியை தந்துள்ளது.