மருத்துவம்

சுகாதாரமின்மையால் உருவாகும் மஞ்சள் பூஞ்சை நோய் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா நோயில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் இருப்பது இந்தியாவில் காணப்பட்டு வருகிறது. புதுவையிலும் இந்த நோய்க்கு 20 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் வெள்ளைப் பூஞ்சை எனும் நோய் தாக்குதல் தற்போது நோயாளிகளிடம் கண்டறியப்பட்டு வருகிறது. அடுத்த சவாலாக மஞ்சள் பூஞ்சை நோய் பரவி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் நகரத்தை சார்ந்த 45 வயது கொரோனா நோயாளிக்கு இந்த நோய் முதல் முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பரவி வரும் பூஞ்சை நோய்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது,”மஞ்சள் பூஞ்சை நோய் பாம்பு, பல்லி உள்ளிட்ட ஊர்வனவற்றுக்கே ஏற்படும். சுகாதாரமாக இல்லாததும், சுகாதாரமற்ற உணவுகளை எடுத்துக்கொள்வதாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கும் மஞ்சள் பூஞ்சை நோய் ஏற்படலாம்.

ALSO READ  இந்த காய்கறிகளை சாப்பிட்டால் மாரடைப்பு வராது:

இந்த நோய் தாக்கியவர்களுக்கு உடல் அசதி, பசியின்மை, திடீரென உடல் எடை குறைதல் ஆகிய அறிகுறிகள் ஏற்படும். உள்உறுப்புகள் பாதித்து மஞ்சள் நிற சீழ் வைத்து ஆறாத புண்களாக மாறி மரணம் கூட ஏற்படலாம்.சிறந்த சுகாதாரம், நல்ல நோய் எதிர்ப்பு சக்தியே பூஞ்சை நோய்களுக்கு எதிரான கவசம் ஆகும். மஞ்சள் பூஞ்சை நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆரம்ப நிலையிலேயே கண்டறியவும் சுகாதாரத்துறை முடுக்கிவிடப்பட்டு உள்ளது”.இவ்வாறு கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெற்றி தரும் வெற்றிலை…!!!

naveen santhakumar

அந்தரங்க உறுப்பில் ஈஸ்ட் தொற்று-அறிகுறி, மருத்துவம் அறிவோம்!

naveen santhakumar

இலவங்கப் பட்டை – தேன் மருத்துவ குணங்கள்

Admin