அரசியல் தமிழகம் தொழில்நுட்பம் மருத்துவம்

கதிர்வீச்சு மூலம் புற்றுநோயை குணப்படுத்தும் அதிநவீன கருவி : முதல்வர் பழனிசாமி தொடக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவிலேயே முதன் முறையாக புற்றுநோயை குணப்படுத்தும் அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை மையத்தை, ஓமந்தூரார் மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். 

கதிர்வீச்சு மூலம் புற்றுநோயை குணப்படுத்தும் அதிநவீன கருவி... முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில், 6 கோடி ரூபாய் மதிப்பிலான புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை வளாகம், 22 கோடி ரூபாய் மதிப்பிலான புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கும் லீனியர் ஆக்சிலேட்டர் கருவி மற்றும் சி.டி. சிமுலேட்டர் கருவி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வளாகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புற்றுநோய்க்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிக்கும் கருவிகளின் செயல்பாடுகளையும் தொடங்கிவைத்தார்.

ALSO READ  கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கும் ரோபோக்கள்..

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிக்கும் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உடலில் எந்த இடத்தில் புற்றுநோய் இருந்தாலும், கதிர்வீச்சு மூலமே குணப்படுத்த முடியும் என்றார்.

ALSO READ  கருப்பு பூஞ்சை மருந்து; தமிழகத்திற்கு 100 குப்பிகள் ஒதுக்கீடு !
Image result for கதிர்வீச்சு மூலம் புற்றுநோயை குணப்படுத்தும் அதிநவீன கருவி

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த மருத்துவச் சிகிச்சை, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு இலவசமாகவே கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த நவீன கருவிகள், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கோவை, தஞ்சை, சேலம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களிலும் விரைவில் பொருத்தப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சாதிக்குள் என்னை அடக்க நினைத்தார்கள்; சரத்குமார் குற்றசாட்டு !

News Editor

தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவருக்கு கொரோனா… 

naveen santhakumar

மொத்தம் 23 நாள் அரசு விடுமுறை – தமிழக வெளியீடு

naveen santhakumar