அரசியல்

சென்னை மாநகராட்சி தேர்தல் – மேயர் வேட்பாளர் கனிமொழி ?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை மாநகராட்சி தேர்தலில் மேயர் வேட்பாளராக கனிமொழியை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு பச்சை துரோகம் செய்கிறார் முதல்வர்!' - கனிமொழி  எம்.பி காட்டம்| kanimozhi mp speech in sivaganga

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில், 101 வார்டுகள் பெண் வார்டுகளாக மாற்ற்றப்பட்டுள்ளது. இதில் ஆண் வார்டுகளை விட பெண் வார்டு கூடுதலாக அமைந்துள்ளதால், சென்னை மேயர் பதவிக்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளது.

நீண்ட பழமைவாய்ந்த சென்னை மேயர் வரலாற்றில் இதுவரை பெண் மேயர் இடம் பெறவில்லை. கடந்த 1996ம் ஆண்டில், சென்னை மேயராக முதல்வர் ஸ்டாலின் முதல் முறையாக பொறுப்பு வகித்த போது, துணை மேயர் பதவி தலித் சமுதாய பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டது.

ALSO READ  தமிழக குடும்பத்தின் ஒவ்வொருவரின் தலையில் ரூ.2,63,976 கடன் - எப்படி தெரியுமா?

இந்த குறையை போக்குவதற்கும், பெண்களுக்கு இடஒதுக்கீட்டில் சம உரிமை தி.மு.க., வழங்குகிறது என்பதை பறை சாற்றவும் இந்த முறை பெண் மேயர் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக தி மு க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பில், சென்னை பெண் மேயர் என இடம் பெற்றால், தி.மு.க., சார்பில்
மகளிர் அணி செயலர் கனிமொழியை, சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட வைக்க வேண்டும் என, மகளிர் அணி நிர்வாகிகள் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தி.மு.கவிடம் இருந்து தூது வந்தது; கமல்ஹாசன் !

News Editor

மோடியால் தமிழக அரசை கட்டுப்படுத்துவது போல தமிழ் மக்களை கட்டுப்படுத்த முடியாது; ராகுல் காந்தி !

News Editor

தமிழ்த்தாய் வாழ்த்து… தமிழக அரசு பிறப்பித்த கட்டாய உத்தரவு!

naveen santhakumar