அரசியல்

வசமாக சிக்கிய கே.பி. அன்பழகன்… அப்செட்டில் இபிஎஸ்-ஓபிஎஸ்!

KP Anbalagan
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 6வது அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோரைத் தொடர்ந்து முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சரான கே.பி.அன்பழகன் வீடு மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் கே.பி. அன்பழகன் அமைச்சராக இருந்த போது வருமானத்தை விட கூடுதலாக 11.32 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, அவர் மீதும் அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திர மோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  உறுதியானது "மக்கள் நீதி மையம் - ஆம் ஆத்மி" கட்சி கூட்டணி..!

இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தருமபுரியில் மட்டும் 41 இடங்களிலும், சென்னை உள்ளிட்ட பிற ஊர்களில் 16 இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருவதால் அதிமுக தொண்டர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தின் சிறந்த முதல்வராக ஸ்டாலின் செயல்படுவார்; திருநாவுக்கரசர்

News Editor

தி.மு.கவை விமர்சித்து அறிக்கை: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Admin

ஸ்டாலினுக்கு எதிராக இரண்டு அவதூறு வழக்குகள்- மாநில அரசு

Admin