அரசியல்

“MSK” அது எங்க கட்சி இல்லை, ரஜினி மக்கள் மன்றம் விளக்கம் 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தேர்தல் ஆணையத்தில் நடிகர் ரஜினி காந்த தரப்பில் ‘மக்கள் சேவை கட்சி’ என்று பெயர் பதிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகின. அதற்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ரஜினி இந்த மாத இறுதியில் தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் ரஜினி தரப்பில் இருந்து  மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சி பதிவு செய்யப்பட்டு, 234 தொகுதிகளுக்கும் பொது சின்னம் கேட்டிருப்பதாகவும் தகவல் வெளிவந்தார் 


அதனையடுத்து  தேர்தல் ஆணையம் அக்கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்தார். இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகியான வி.எம். சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி அதில் இடம் பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ALSO READ  62 இடங்களில் வெற்றி… டெல்லி தேர்தலில் அசத்திய ஆம் ஆத்மி…

தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்’.என விளக்கமளித்துள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என்.ஆர்.சி.யை தமிழகத்தில் கொண்டு வந்தால் அ.தி.முக. எதிர்க்கும் -அமைச்சர் உதயகுமார்

Admin

அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை:

naveen santhakumar

தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்!

Shanthi