அரசியல்

நாளை ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஈரோடு:

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது.இதன் காரணமாக  அரசியல் கட்சிகள் முன்கூட்டியே தங்களது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது.ADMK இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி சேலத்தில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை பெரிய சோரகை கிராம கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு எடப்பாடி தொகுதியில் இருந்து தொடங்கினார்.

தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தூத்துக்குடியில் நேற்று முன்தினம் அவர் பிரசாரம் செய்தார்.இதற்கிடையே, நாளை ஈரோடு மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். காலை 9 மணிக்கு பவானியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். 10 மணிக்கு சிறு, குறு தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடும் எடப்பாடி பழனிசாமி, காலை 11 மணிக்கு அந்தியூரில் பொதுக்கூட்டம், பகல் 12 மணிக்கு வெற்றிலை கொடி விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்.

ALSO READ  யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி போட்டி

அத்தானி, கள்ளிப்பட்டி, நால்ரோடு, சத்தியமங்கலம், நல்லூர், பு.புளியம்பட்டி, காந்திநகர், நம்பியூர் ஆகிய இடங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு கோபிசெட்டிபாளையம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். நாளை மறுதினம் பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகே பொதுக்கூட்டம்,அதனைத்தொடர்ந்து தொழில் முனைவோர், வக்கீல்கள், டாக்டர்கள், விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்.

மாலை 4 மணிக்கு ஓடாத நிலையில் பொதுக்கூட்டம், அரச்சலூரில் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடல், பெருந்துறையில் கைத்தறி தொழில் முனைவோர், உள்ளூர் பிரமுகர்களுடன் கலந்துரையாடுகிறார்.இரவு 7.30 மணிக்கு பெருந்துறையில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உங்கள் பொய் வாக்குறுதிகளை  எங்கள் நிஜ வாக்குறுதி வெல்லும்-ஜி.கே வாசன் 

News Editor

அமைச்சரவையில் பங்கு கேட்பீர்களா? பாஜக மாநில தலைவர் பதில்..! 

News Editor

ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது நிறுத்தி வைப்பு மீது‌ வழக்கு…!!

Admin