தமிழகம்

கேரளா கோழிகளுக்கு தமிழகத்தில் தடை…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகம் பரவி வருவதால் கோழி, வாத்து உள்ளிட்டவைகளை தமிழகம் கொண்டுவர தடை விதித்து தமிழக கால்நடைத்துறையின் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.  

கால்நடைத்துறை இயக்குனரின் உத்தரவில், ‘கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் பகுதிகளில் பரவிய பறவைக் காய்ச்சல், தமிழகத்துக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோழி, வாத்துகளின் முட்டை, இறைச்சி, தீவனங்களைக் கொண்டு வரும் வாகனங்களைத் திருப்பி அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரள எல்லையில் உள்ள கன்னியாகுமரி, திருப்பூர், தென்காசி, தேனி, நீலகிரி, கோவை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 26 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்குக் குளோரின் டை- ஆக்ஸைடு தெளிக்க வேண்டும். கோழிப்பண்ணைகள், பறவைகள் சரணாலயங்களில் கிருமிநாசினி தெளித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Share
ALSO READ  தமிழர்களின் உரிமைகளை மோடியிடம் அடமானம் வைத்துவிட்டார் முதல்வர்;உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

naveen santhakumar

சென்னை தினத்தை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு!

Shanthi

முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடக்கம்!

naveen santhakumar