விளையாட்டு

முதல் டெஸ்டில் சொதப்பிய இந்தியா … அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெல்லிங்டனில் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 165 ரன்களும், நியூசிலாந்து அணி 348 ரன்களும் எடுத்தன.

இதனைத்தொடர்ந்து 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே நிதானத்தை கடைபிடித்தது. தொடக்க வீரரான மயங்க் அகர்வால் 58 ரன்கள் எடுத்தார். 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. ரகானே 25 ரன்களுடனும், விகாரி 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ALSO READ  இந்தியாவிற்கு கிடைத்தது முதல் பதக்கம் :

இந்நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 81 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 9 ரன்கள் நிர்ணயிக்கப்பட, அந்த அணி எளிதாக இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘தல தோனி’தான் கிரேட்… சொன்னது யார் தெரியுமா?

Admin

வீரர்களுக்கு கொரோனா தொற்று; இன்றைய (MI vs SRH) போட்டி ரத்து !

News Editor

மைதானத்திற்குள் பார்வையாளர்களை அனுமதிக்காமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடிவு…..

naveen santhakumar