விளையாட்டு

வீரர்களுக்கு கொரோனா தொற்று; இன்றைய (MI vs SRH) போட்டி ரத்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில்  நாளுக்கு  நாள் அதிகரித்து  வரும் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 4 லட்சத்தை கடந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  எடுத்து வருகின்றனர். டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐ.பி.எல். டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கிய  ஐபிஎல்  கிரிக்கெட் தொடர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி வீரர்களுக்கு முறையாக பயோ-பபுளை முறையின் கீழ் பாதுகாப்பாக வைத்திருந்த நிலையில் , கொல்கத்தா அணி வீரர்களான வருண் சக்கரவர்த்தி, சந்திப் வாரியர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று நடைபெற இருந்த (கொல்கத்தா-பெங்களூரு) போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. 

ALSO READ  கொரோனா வைரஸை முதன்முதலில் கண்களால் கண்ட பெண் மருத்துவர்... அது குறித்து அவரது பேட்டி...

இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த மும்பை இந்தியன்ஸ்-ஹைதராபாத் அணிகளுக்கான போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத் அணி வீரர் விர்திமான ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றைய போட்டியை ஐ.பி.எல் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த வீரர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக நிர்வாகம் கூறியுள்ளது. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டெஸ்ட் தொடர் யாருக்கு.. முதல் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்

Admin

ஜூனியர் உலக கோப்பையை வெல்லுமா இந்தியா?

Admin

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஒரே இன்னிங்சில் 4 பாக். பேட்ஸ்மேன்கள் சதம்

Admin