தமிழகம்

ஆபாச செயலிகளுக்கு விரைவில் தடை – தமிழக காவல் துறை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆபாச வீடியோக்களை பரப்பும் செயலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவற்றுக்கும் விரைவில் தடை விதிக்கப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் இந்தியாவில்தான் அதிகமாக ஆபாசப் படம் பார்க்கிறார்கள் என கடந்த டிசம்பர் மாதம் புள்ளிவிவரத்துடன் மத்திய அரசு தகவல் வெளியிட்டது. இந்தியாவை பொறுத்தவரையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளங்களில் இவ்வாறு ஆபாசப் படங்கள் பார்ப்பவர்களின் ஐ.பி.முகவரியுடன் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் தடை செய்யப்பட்ட இணையதளங்களில் ஆபாசப்படங்கள் பார்த்தது தெரியவந்துள்ளது. அதில் 3 ஆயிரம் பேர் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் பார்த்தவர்கள்.

ALSO READ  சிலிண்டர் விலை உயர்வு பேரிடி… விமர்சித்த சீமான்!

இது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து தமிழக காவல் துறைக்கு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. தவிர குறிப்பிட்ட சில ஆபாச இணையதளங்களுக்கு மத்திய அரசு தடையும் விதித்தது. சிலர் கைது செய்யப்பட்டனர்.

இணையதளத்துக்கு இருப்பதுபோன்ற தடைகள், செல்போன் செயலிகளுக்கு இல்லை. இதனால் ஆபாசப் படங்களுக்கான களமாக இணையதளத்துக்கு பதிலாக செல்போன் செயலியை பயன்படுத்த பலர் தொடங்கியுள்ளனர். இவை நேரடியாக சம்பந்தப்பட்டவரின் செல்போனுக்கே சென்றுவிடும் என்பதால் ஆபாசப் படங்களுக்கான செயலிகளும் அதிக அளவில் உருவாக்கப்பட்டு அதன்மூலம் பணம் ஈட்டுகின்றனர். இந்தியாவில் இந்தி நடிகைகள் மாடல் அழகிகள் சிலர் இதுபோன்ற செயலிகளை வெளியிட்டுள்ளனர்.

ஒருசில படங்களில் மட்டுமே நடித்த இந்தி நடிகை சிலர் தங்கள் பெயரில் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தினார். முதலில் தன் புகைப்படங்களை மட்டுமே அதில் பகிர்ந்து வந்தார் இவர்கள் அடுத்தகட்டமாக தங்கள் ஆபாச வீடியோவையும் வெளியிட்டார். செயலியில் இதுபோன்ற வீடியோக்களை பார்க்க தனியே கட்டணம் செலுத்தவேண்டும் என்பதால் அவருக்கு நல்ல வருமானமும் கிடைத்தது. சுமார் 10 லட்சம் பேர் வரை அது போன்ற செயலியை பதிவிறக்கம் செய்தனர்.தொடர்ந்து பலரும் இதுபோன்ற ஆபாச செயலிகளை தொடங்க ஆரம்பித்துள்ளனர்.

ALSO READ  தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்

ஆபாச இணையதளங்கள் போன்று இந்த ஆபாச செயலிகளுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை தமிழக காவல் துறை எடுத்து வருகிறது என்றும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வருமான வரித்துறைக்கு நன்றி சொன்ன அஜித்.. இணையத்தில் வைரலாகும் அறிக்கை.

naveen santhakumar

கடுமையான தண்டனை தேவை- வீர விளையாட்டு மீட்பு கழக மாநில தலைவர் ராஜேஷ் அறிக்கை….

naveen santhakumar

பெரியார் பிறந்தநாள் சமூகநீதிநாளாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார் …!!

Admin