தமிழகம்

தமிழக பட்ஜெட்- எந்த துறைக்கு எவ்வளவு நிதி? முழுமையான விவரங்கள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2020-21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் OPS தாக்கல் செய்தார்.

அது குறித்த விவரங்கள்:-

1) சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு.

2) சமூக நலன் மற்றும் மதிய உணவுத்திட்டத்திற்கு ரூ.5,935 கோடி ஒதுக்கீடு.23 உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு.

3) வேளாண்மைத்துறைக்கு 11,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு மற்றும்

4) பொதுப்பணித்துறை, நீர்பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு.

5) நெடுஞ்சாலை துறைக்கு ரூ.5,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

6) மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

7) சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு ரூ.607 கோடி ஒதுக்கீடு.

8) போக்குவரத்து துறைக்கு ரூ.2,716 கோடி ரூபாய் ஒதுக்கீடு. அரசுப்பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா அமைக்க ரூ.75 கோடி ஒதுக்கீடு. 525 மின்சார பேருந்துகள் வாங்க ரூ.960 கோடி ஒதுக்கீடு.

9) காவல்துறைக்கு ரூ. 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு.சிறைச்சாலை துறைக்கு ரூ.392 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

10) மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்க ரூ.966 கோடி ஒதுக்கீடு.


அரசு பள்ளிகளில் உயர்தர பரிசோதனை கூடங்கள் அமைக்க ரூ.520 கோடி ஒதுக்கீடு.

ALSO READ  ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி

11) வரும் நிதியாண்டில் ரூ.59,209 கோடி கடன் வாங்க தமிழக அரசு திட்டம்.

12) கிராம உள்ளாட்சி வளர்ச்சிக்கு ரூ.6754 கோடி ஒதுக்கீடு.

13) 2,298 கோடி மதிப்பிலான அணைக்கட்டு திட்டத்திற்கு 300 கோடி ஒதுக்கீடு.

14) ரூ.77.94 கோடியில் நெல்லை கங்கை கொண்டானில் உணவு பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு.

15) கிராமபுறங்களில் வாழ்வாதாரத்தை பெருக்க முதலமைச்சரின் 5 ஆண்டுகால கிராம தன்னிறைவு திட்டம் அறிமுகம்.

16) ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.3,041 கோடி ஒதுக்கீடு. சரபங்கா நீரேற்று திட்டத்திற்காக கூடுதலாக ரூ.350 கோடி ஒதுக்கீடு.

17) முதலைமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
வரும் நிதியாண்டில் 1,12,876 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம்.

18) சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு.

19) ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1,650 கோடி ஒதுக்கீடு.

20) நடப்பாண்டில் 10,276 சீருடைபபணியாளர்கள் பணியமர்த்தப்படுவர்.

21) சென்னை – குமரி தொழில் மண்டல வழித்தட திட்டத்திற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.

22) அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக கூடுதலாக நடப்பாண்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

ALSO READ  நோயாளிக்கு மருத்துவரே தாயான தருணம்.. உணவு ஊட்டிய நெகிழ்ச்சி சம்பவம்..

23) டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்திற்காக ரூ. 959 கோடி ஒதுக்கீடு.

24) பெருந்துறை, குருக்கால்பட்டி ஆகிய இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.

25) அம்மா விரிவான ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு.

26) சென்னையில் விரிவான வெள்ள பேரிடர் தடுப்பு திட்டத்தை 3 ஆயிரம் கோடியில் செயல்படுத்த உலகவங்கி மற்றும் ஆசிய வங்கியிடம் தமிழக அரசு முன்மொழிந்துள்ளது. சென்னை பேரிடர் மேலாண்மைக்காக 1,360 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

27) தூத்துக்குடி அருகே, ரூ.49,000 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும்.

28) குழந்தை இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் 2030-ல் அடைய வேண்டிய இலக்கை முன்கூட்டியே அடைந்து தமிழகம் சாதனை – ஓபிஎஸ்.

29) அரசுப்பணியாளர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக 342 மற்றும் 306 கோடி ருபாய் ஒதுக்கீடு.

30) ஏழை மாணவர்கள் உயர்கல்வியை பெறும் வகையில் முதல் தலைமுறை மாணவர்களின் கல்விக் கட்டணச் சலுகைகள் வழங்க 506 கோடி ரூபாய் ஒதுக்கீடு.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்திற்கு மஞ்சள் அலார்ட்….வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..

naveen santhakumar

அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்; அறிவுரை கூறிய காவல்துறை !

News Editor

ஆதார் கார்டு ஜெராக்ஸ்-ல தான் பஜ்ஜி மடிச்சு கொடுப்பார்களாம்..என்னடா நடக்குது இங்க..

Admin