தமிழகம்

மதுரையில் போலி ஆதார் அட்டையுடன் தங்கியிருந்த உஸ்பெகிஸ்தான் பெண் கைது….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை:-

மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.அப்பொழுது ரூபியா நிஷன் என்ற பெயரில் பெண் ஒருவர் தங்கி இருப்பது தெரியவந்தது.

டெல்லியைச் சேர்ந்தவர் என பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர் சமர்ப்பித்த அடையாள அட்டையை வாங்கி பார்த்துள்ளனர்.

அந்த ஆதார் அடையாள அட்டையில் இறந்த பெண்ணின் முகம் வெளி நாட்டைச் சேர்ந்தவர் போன்ற தோற்றத்தில் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் உடனடியாக அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தபோது அறையில் வேறு சிலருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

அவரிடம் நேரடியாக விசாரணை நடத்தியபோது இந்திய மொழிகளுக்கு முரணான வகையில் அவரது மொழிப் பிரயோகம் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். பின்னர் அவரை பரிசோதித்த போது அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் அவர் உஸ்பெகிஸ்தான் நாட்டைச்சேர்ந்த நைமோவா ஜெரினா (22) என்பது தெரியவந்தது.

ALSO READ  தமிழகத்தில் 29சதவீதம் சாலை விபத்துகள் குறைவு: அமைச்சர் நிதின் கட்காரி

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுலா விசாவில் வந்துள்ளார். அவரது விசா கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் நாடு திரும்பாமல் இந்தியாவிலேயே தங்கியுள்ளார். கடந்த ஓராண்டாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பல விடுதிகளில் தங்கி உள்ளார். அவர் தங்குவதற்கு ஏதுவாக போலி ஆதார் அட்டை ஒன்றை தயாரித்து அதை பயன்படுத்தி வந்துள்ளார்.

ALSO READ  தென் மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கும் பெண் சிசு படுகொலை..

ஒவ்வொரு பயணத்தின் போதும் இவர் மட்டுமன்றி இவருடன் மேலும் சிலர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதால் என்ன காரணத்திற்காக அவரை ஒவ்வொரு பகுதிக்கும் அழைத்துச் சென்றனர்.

இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட நகரங்களில் தான் அதிக அளவில் பயணம் செய்துள்ளார்கள் என்பதால் உளவு பார்க்க வந்தவராக இருக்கலாம் என்கிற கோணத்தில் மதுரை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகை..! 

News Editor

மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் ஆங்கிலத்தில்தான் பதிலனுப்ப வேண்டும்.

News Editor

சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்; மருத்துவமனை அறிவிப்பு !

News Editor