அரசியல் தமிழகம்

சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி 6

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தான் பார்த்த, பழகிய,நேசித்த, கற்றுக் கொண்ட, கொண்டாடிய மனிதர்களை அவர்களுடனான தன் நினைவுகளை மூத்த பத்திரிக்கையாளர் எம்.ஜெ. பிரபாகர் பகிர்ந்து கொள்ளும் தொடர் இது.

*திராவிட கட்சிகளுக்கு  மாற்று அரசியலை முன் வைத்த தோழர்*

திராவிட கொள்கையில் நாட்டம் கொண்டவர் தோழர் ஜி.ஆர் என்ற ஜி ராமகிருஷ்ணன். இவர் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், மேமாளூர் கிராமத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் ஜூன் 6, 1949 பிறந்தார். 

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சட்டம் பயில வேண்டும் என்று சென்னைக்கு வருகிறார் தோழர் ஜி. ராமகிருஷ்ணன்.சட்டக்கல்லூரியில் பயிலும் போது கூலி உயர்வு கேட்டு போராடிய விவசாய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர் பெரும் முதலாளிகள். நாகை மாவட்டம் கீழ்வெண்மணியில் இப்போராட்டம் தீவிரமடைந்தது. தாழ்த்தப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 44 பேரை குடிசையில் வைத்து தீயிட்டு எரித்த சம்பவம் நடக்கிறது. 

இச்சம்பவம் தொடர்பான கண்டன அறிக்கை இவரது கையில் கிடைக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் இப்படி நடந்துள்ளது இவருக்கு வேதனையை தருகிறது.
இதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் விபி சிந்தன் சட்டக் கல்லூரியில் கலந்துகொண்ட கூட்டத்தில் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். திராவிட கொள்கையில் ஈடுபாடு கொண்ட நிலையில் இருந்த தோழர் ஜி.ஆர், வி பி .சிந்தன் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு கம்யூனிசக் கொள்கையில் பிடிப்பு ஏற்பட்டது.

இடதுபுறம் தோழர் வி பி சிந்தன்.

அதன் பின் மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இந்திய மாணவர் சங்க பணிகளில் ஈடுபட்டு கொண்டே சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். 1969-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் ஆனார். சென்னையில் படிப்பை முடித்த பின்னர் கடலூரில் 8 ஆண்டு காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

ALSO READ  மனைவியின் தலையை துண்டித்த கணவன்.. சேலத்தில் நடந்த கொடூரம்.....

கடலூரில் உள்ள நீதி மன்றத்தில்  வழக்கறிஞர் பணி செய்து கொண்டே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பணிகளையும் மேற்கொண்டார் தோழர் ஜி.ஆர்.மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர்கள் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்னாற்காடு மாவட்டச் செயலாளராகவும், அகில இந்திய நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்திய அரசின் கீழ் செயல்படும் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் கடலுார் மாவட்டத்தில் உள்ளது. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணி புரியும் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்க பணியினை செய்யும் படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்டளையிட்டது .அதனை ஏற்று தொழிற்சங்க பணியினை நெய்வேலியில் இருந்து மேற்கொண்டார்.

சுரங்க தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிர்வாகம் நிறைவேற்றவில்லை. எனவே தொழிலாளர் கோரிக்கை நிறைவேற்றக் கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். 9 நாட்கள் கடந்த பின் தான் நிர்வாகம் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்தது.

இந்திய தொழிற்சங்க மையத்தின் தமிழ் மாநில குழு உறுப்பினரானார். அதன்பின் முழுநேர கட்சி பணியை மேற்கொண்டார். தொடர்ந்து இயக்கப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு தமிழகம் அறிந்த தலைவராக உருவானார். இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு, மாநில செயற்குழு அதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாநிலத்தின் செயலாளராகவும் 3 முறை தேர்வு செய்யப்பட்டார்.

இயக்க செயல்பாடுகளின் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து இந்தியாவை வழிநடத்தி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றளவும் திறமையாக செயல்பட்டு வருகிறார்.

மாற்று அரசியலை முன் வைத்த தோழர் ஜி. ஆர்.:-

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு (தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் மாறி மாறி ஆட்சியை நடத்தி வருகின்றனர்) மாற்றாக மூன்றாவது அணியை (இடதுசாரிகள், ம.தி.மு.க., தே.தி.மு.க., ஜி.கே. வாசன் தலைமையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவை) உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.

ALSO READ  முருகேசன் - கண்ணகி ஆணவக்கொலை வழக்கில் டிஎஸ்பி செல்லமுத்து இன்ஸ்ஸ்பெக்டர் தமிழ்மாறன் உள்பட 13 பேர் குற்றவாளிகள் - கடலூர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

பாரதி புத்தகாலயம்:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு கட்சி கல்வி அவசியம். தொடர்ந்து கட்சி உறுப்பினர்களுக்கு இளைஞர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றுவரும். வகுப்புகளுக்கு உரிய குறிப்புகள் பெரும்பாலும் நூல் வடிவத்தில் இருப்பதில்லை. அனைவரும் தொடர்ந்து இந்திய அரசியலை வழிநடத்த வேண்டும் என்ற அடிப்படையில் புத்தக நிறுவனம் ஒன்று இருந்தால் இளைஞர்களும் தோழர்களும் பயன்பெறுவார்கள் என்ற அடிப்படையில் பாரதி புத்தகாலயம் என்ற நிறுவனம் தோழர் ஜி ராமகிருஷ்ணன் மூலம்தான் உருவானது. 

இன்றைக்கு ஆயிரக்கணக்கான நூல்களை வெளியிட்டு பல லட்சக்கணக்கான வாசகர்களை கொண்டுள்ளது இந்நிறுவனம். படைப்பாளிகளுக்கும் படைப்பாளர்களும் இது மிகப்பெரிய ஆலமரமாக திகழ்கிறது.இவரது துணைவியார் ரீட்டா ராமகிருஷ்ணன் எனது இரண்டாவது சகோதரியும் ஆவார்.

தோழர்கள் ரீட்டா மற்றும் ராமகிருஷ்ணன்

தோழர் ஜி ராமகிருஷ்ணன் சிறந்த பேச்சாளர் ,சிறந்த மொழிபெயர்ப்பாளர், சிறந்த கட்டுரையாளர் கட்சி தோழர்களுக்கு அரசியல் வகுப்பு எடுப்பதில் இவருக்கு நிகர் இவரே.

பொதுவாக தலைவர்கள் தலைவர்களை பற்றிய நூல் எழுதுவார்கள். ஆனால் தோழர் ஜி.ஆர். தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணயாக இருந்த அடிமட்ட தொண்டர்களை அடையாளம் கண்டு தொடர்ந்து தீக்கதிர் நாளிதழில் ஒவ்வொரு வாரமும் பதிவு செய்தார். இக்கட்டுரைகள் “களப்பணியில் கம்யூனிஸ்ட்கள்” எனும் நூலாக வெளிவந்தது பெரும் வரவேற்பை பெற்றது.

தோழர் ஜி. ஆர் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய குழந்தைகளுக்கும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது

-தொடரும்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குரூப் 4 தேர்வு முறைகேடு : 2 தாசில்தார்கள் கைது

Admin

கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு…

naveen santhakumar

ஊரடங்கில் தளர்வு….பேருந்து சேவைக்கு அனுமதி….

Shobika