தமிழகம்

பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் குழந்தையின் சாட்சியம் மட்டுமே போதுமானது : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

அறியாமையையும், தனிமையையும் பயன்படுத்தி, குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது அவர்களை தவிர வேறு சாட்சியங்களை எதிர்பார்க்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019 மே மாதம் வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு, அப்பகுதியை சேர்ந்த ரூபன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பொள்ளாச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

POCSO cases] Victim's testimony sufficient for conviction unless there is  strong reason to discard it: Madras

இவ்வழக்கில் ரூபனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூபன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரூபன் தரப்பில் ஆஜரான வக்கீல், சம்பவம் நடந்ததாக கூறப்படும் அன்று அந்த இடத்தில் ரூபன் இல்லை.

ALSO READ  MLA காதல் திருமண வழக்கு…...கணவருடன் செல்ல உத்தரவு…...

சிறுமியை தவிர வேறு சாட்சியங்கள் யாரும் இல்லாத நிலையில், விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கியது சரியானதல்ல என்று வாதிட்டார்.

இதற்கு காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வக்கீல் எஸ்.சுகேந்திரன், இதே சிறுமியிடம் ஏற்கனவே ரூபன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். சிறுமி அளித்த வாக்குமூலம் தெளிவாக உள்ளது என்று வாதிட்டார்.

ALSO READ  நடிகர் தனுஷ் வழக்கின் தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு :
Definition of private parts depends on what it means in our society: Mumbai  court - India News

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.வேல்முருகன் குழந்தைகளின் அறியாமையையும், தனிமையையும் பயன்படுத்தி குற்றவாளிகள் செயல்படும் இதுபோன்ற சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்களை தவிர வேறு நேரடி அல்லது தனிப்பட்ட சாட்சியங்களையோ எதிர்பார்க்க முடியாது.

இந்த வழக்கை பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் தெளிவாகவும், நம்பிக்கை தரும் வகையிலும் இருப்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டு கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே, கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட முடியாது என நீதிபதி பி.வேல்முருகன் தெரிவித்ததோடு மேல் முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சோழவந்தான், மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏக்களுக்கு கோரொனா… 

naveen santhakumar

விவசாயின் வீடு இடிப்பு; ஒரு வருடமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை !

News Editor

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம்- தமிழக அரசு…???

naveen santhakumar