தமிழகம் மருத்துவம்

3 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் உயிரிழப்பு – தஞ்சை பெண் பலி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு முதல் கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த எந்தவித இணைநோயும் இல்லாத இளம்பெண் ஒருவர் தஞ்சாவூரில் உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 332 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 476 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ  முடிந்தால் வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டுங்கள்; கே.என் நேருக்கு பதிலளித்த தேர்தல் அலுவலர் !

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 221 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த எந்தவித இணைநோயும் இல்லாத 18 வயது இளம்பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான மருத்துவ காரணம் குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளி பொது தேர்வில் மாற்றம் – மார்ச், ஏப்ரலில் நடைபெறாது

naveen santhakumar

ஆமா லஞ்சம் கொடுத்தேன்.. ஒப்புக் கொள்ளும் தமிழக மக்கள்.. அதிர்ச்சி முடிவுகள்..

Admin

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் போராட்டம் – வணிகர் சங்கம் எச்சரிக்கை!!

naveen santhakumar