தமிழகம்

“ஆட்டோ, டாக்சிகளில்” இனி.. டிஜிபி அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

முழு ஊரடங்கு நாட்களில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஜன.09 மற்றும் ஜன.16 என முழு ஊரடங்கு அமலாக்கப்பட்ட இரு தினங்களிலும் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் காவல்துறையினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளீர்கள்.ஊரடங்கு காலத்தில் சிலர் காவல்துறையினரை தாக்கிய போதும் காவலர்கள் துறைக்குரிய பொறுப்புடன் பணியாற்றியுள்ளீர்கள்.அதற்கு பாராட்டுகள்.

எனினும்,முழு ஊரடங்கு நாட்களில் வெளி ஊர் சென்று திரும்பும் பயணிகள் ஆட்டோ,டாக்சிகள் கிடைக்காமல் அவதியுற்றதாகவும்,சில ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன.எனவே,வெளியூர் சென்று திரும்பும் பயணிகளுக்கு ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் ஆட்டோ,டாக்சிகள் கிடைப்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும்.

ALSO READ  குளித்தலை திமுக எம்எல்ஏ-க்கு கொரோனா... 

குறிப்பாக,முழு ஊரடங்கு நாட்களில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என தெரிவித்துள்ளார்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மதுரையில் விதிமீறல் அபராதம் என்று பகல் கொள்ளை:

naveen santhakumar

நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்! இளைஞர் கைது..

Shanthi

குரூப் 4 தேர்வு முறைகேடு : 2 தாசில்தார்கள் கைது

Admin