தமிழகம்

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவ.1லிருந்து பள்ளிகள் திறப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. பள்ளி, மாணவர்களின் நலன் கருதி, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, 50 சதவீத மாணவர்களுடன், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்  தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தியிருந்தார். அதனைத்தொடர்ந்து, வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.

ALSO READ  மதன் OPன் மனைவி கிருத்திகா கைது…!

1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும். மேலும் இதற்காக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோரின் கருத்துகள் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் நவம்பர் 1ம் தேதி முதல் ஒன்று முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிகரிக்கும் கொரோனா- ஜூன் 17 முதல் மீண்டும் ஊரடங்கு .. உண்மை என்ன??

naveen santhakumar

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

News Editor

டாஸ்மாக் கடைக்கு ஷட்டர்; திருட்டை தடுக்க புதிய வழி !

News Editor