தமிழகம்

10 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ஐந்து பைசா பிரியாணி- கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை:-

பக்ரீத் பண்டிகையையொட்டி மதுரையில் பிரியாணிக் கடை திறப்பு விழாவை முன்னிட்டு 5 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி என விளம்பரம் செய்ததால், விற்பனை தொடங்கிய 10 நிமிடங்களில் பிரியாணி விற்றுத் தீர்ந்தது.

மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரசாந்த்- அக்ட்சயா தம்பதியர். இவர்கள், மதுரையில் சுகன்யா என்ற பெயரில் அசைவ ஓட்டல் நடத்துகின்றனர். இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி தங்களது ஓட்டலின் 3-வது கிளையைத் திறக்கத் திட்டமிட்டனர்.

ALSO READ  முதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து; குடும்ப அட்டைக்கு 4 ஆயிரம் ! 

கடை திறப்பு விழாவை முன்னிட்டு 5 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி என விளம்பரம் செய்ததால், 5 பைசா நாணயத்துடன் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டனர். இதனை எதி்ர்பார்க்காத கடை ஊழியர்கள் திகைத்தனர்.

5 பைசா கொண்டு வரும் 50 நபர்களுக்கு பிரியாணி வழங்க முடிவு செய்திருந்த அவர்கள், கூட்டம் அதிகமாக கூடியதால் கடையின் கதவுகளை அடைத்தனர். அங்கு அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முககவசம் அணியாமல் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ  மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு!

இது குறித்து தகவல் அறிந்து செல்லூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கடை ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடை மூடப்பட்டதால் போலீசார் அங்கிருந்து அனைவரையும் கலைந்து போகச் செய்தனர்.

இதனிடையே, கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்களுக்கு பிரியாணி விற்பனை செய்த அந்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நளினிக்கு பரோல் கேட்டு தாய் வழக்கு… தமிழக அரசு சொன்னது என்ன?

naveen santhakumar

கொரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார் முதல்வர் ! 

News Editor

முதல்வரின் முகவரி பெயரில் புதிய துறை உருவாக்கம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

News Editor