தமிழகம்

முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை- நீலகிரி ஆட்சியர்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஊட்டி:-

நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாவிட்டால், சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடியாக அறிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 513ஆக அதிகரித்துள்ள நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் முறையான அனுமதியின்றி திருமணம் உள்ளிட்ட தனிநபர் நிகழ்ச்சிகளை நடத்தினால், ஓராண்டு சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடியாக அறிவித்துள்ளார். 

ALSO READ  உதகையில் நிலச்சரிவு - ரயில் சேவை இன்று ரத்து..

இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆணையர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டம் உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் தொற்றுநோய் சட்டம், 1897-ன் கீழ் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத தனி நபர்கள், நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ALSO READ  'புத்தியுள்ள மனிதரெல்லாம்' பாடலில் தனது எக்ஸ்ப்ரஷன் மூலம் அனைவரையும் கவர்ந்த சிறுவன்....

பொது இடங்களில் நோயைப் பரப்பும் வகையில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிசம்பர் மாதத்தில் 30க்கும் மேற்பட்ட தமிழ்படங்கள் வெளியீடு- ஏன் தெரியுமா?

Admin

பெரியார் அண்ணா வழியில் பாடுபடுகிறேன்; வைக்கோ பேச்சு 

News Editor

“இந்தியாவுக்கே வழிகாட்டும் புதுமைப் பெண் திட்டம்” – அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம்!

Shanthi