தமிழகம்

டாஸ்மாக் கடைக்கு ஷட்டர்; திருட்டை தடுக்க புதிய வழி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சேலம் மாநகராட்சி பகுதியில் மட்டும் 60 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளது. இதுபோல மாவட்டம் முழுவதும் 220 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக  அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் நேற்று முதல்  மூடப்பட்டு உள்ளது.
 வருகிற 24-ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுபான கடைகள் அடைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது.

ALSO READ  நான் நலமுடன் உள்ளேன்- செவிலியர்களுடன் சத்ரியன் படம் பார்த்த விஜயகாந்த்

இருப்பினும் ஒரு சில டாஸ்மாக் கடைகளில் பணியாளர்கள் கடையை திறந்து மதுபாட்டில்களை எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும்  டாஸ்மாக் கடைகளில் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது. இதனை  தடுக்க டாஸ்மாக் அதிகாரிகள் அனைத்து டாஸ்மாக் மதுபான  கடையின் முன்புறம் ஷெட்டரையொட்டி இரும்பு கம்பிகளை பொருத்தி   வெல்டிங் வைக்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து இன்று காலை முதல் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளின் முன்புறம் ஷெட்டரை திறக்க முடியாத அளவில் இரும்புக் கம்பிகளை பொருத்தி வெல்டிங் வைத்தனர். அப்போது சரியாக வெல்டிங் வைக்கப்படுகிறதா? என டாஸ்மாக் அதிகாரிகள் கண்காணிக்கவும் செய்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா கட்டுப்பாடுகள்… மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்!

naveen santhakumar

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த இளம் மருத்துவர் உடலை அடக்கம் செய்யச் கிராமதினர் எதிர்ப்பு… தாயாரின் விபரீத முடிவு…

naveen santhakumar

பெண்கள் எந்த நேரத்திலும் காவல்துறையின் உதவியை நாட உதவி எண்கள்… 

naveen santhakumar