தமிழகம்

தமிழகத்தில் மத வழிபாட்டு தலங்கள் திறப்பு : பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை…!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை களில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:

பீட்டர் அல்போன்ஸ் : முதல்வர் ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், அரசு ஊழியர்களின் கடும் உழைப்பால் தமிழகத்தில் கொரோனா பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ALSO READ  கமலின் தோல்விக்கு மறைமுகமாக செயல்பட்டார் மகேந்திரன் !

பள்ளிகள், திரையரங்குகள், சுற்றுலா மையங்கள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இனிமேல் வெள்ளி, சனி,ஞாயிறுகளில் அனைத்து மதவழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும்.

எனவே, மக்களின் கோரிக்கையை ஏற்று, வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நவம்பர் 1ம் தேதி விடுமுறை! ஆட்சியர் அறிவிப்பு !

naveen santhakumar

அரசு பேருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

News Editor

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள் !

News Editor