தமிழகம்

சென்னையில் ஒருவருக்கு புது வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது கரோனா வைரஸ். தற்போது மரபியல் மாற்றம் அடைந்து வீரியமிக்க கரோனா வைரஸாக பிரிட்டன் முழுவதும் பரவி வருகிறது இந்நிலையில் பிரிட்டனிலிருந்து சென்னை வந்தவருக்கு புது வகையான வைரஸ் தொட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அந்த நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இது குறித்து தகவலை கூறினார் அவர் கூறியதாவது பிரிட்டனில் இருந்து டெல்லி வந்த 553 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டது அவர் கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதனை தொடர்ந்து வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைவருக்குமே ஆர்.டி.பி.சி. ஆர் சோதனை எடுக்கப்பட்டு  96 மணி நேரத்திற்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்றும், கடந்த 10 நாட்களில் டெல்லி மற்றும் பிரிட்டனில் இருந்து வந்த அனைவரின் பெயர் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்களுக்கு சோதனை பரிசோதனை எடுக்கப்பட்டது.

ALSO READ  ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்றுவந்த தம்பதிகளுக்கு கொரோனா...

இதனையடுத்து அவர்களை மாநகராட்சி குழு ஒன்று கண்காணித்து வருகிறது. பல்வேறு கட்டங்களாக இந்த கண்காணிப்பு நடந்து வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் கூறினார்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம் !

News Editor

ரஜினிகாந்த் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ்: காவேரி மருத்துவமனை

naveen santhakumar

இன்று மறைமுக தேர்தல்: மாவட்டங்கள்,ஒன்றியங்கள் யாருக்கு?

Admin